உலக பிசியோதெரபி தினத்தின் வரலாறும் முக்கியத்துவமும்
1996 முதல் செப்டம்பர் 8 அன்று உலக பிசியோதெரபி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1951-ஆம் ஆண்டு World Physiotherapy அமைப்பு தொடங்கப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது. இந்த அமைப்பு முன்பு World Confederation for Physical Therapy என்று அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மையக்கருத்து உண்டு. நோயாளி பராமரிப்பு, மறுவாழ்வு சிகிச்சை (Rehabilitation) அல்லது ஆரோக்கியமான வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கியமான பகுதியின் மீது அது கவனத்தை ஈர்க்கிறது.
- உலகெங்கும் உள்ள பிசியோதெரபிஸ்ட்களின் பங்களிப்பைப் போற்றுதல்
- பிசியோதெரபி வாழ்க்கைத் தரத்தை எப்படி மேம்படுத்துகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- இன்றைய சுகாதாரப் பராமரிப்பில் அதன் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுதல்
உலக பிசியோதெரபி தினம் 2025 மையக்கருத்து
இந்த ஆண்டின் மையக்கருத்து: ஆரோக்கியமான முதுமைக்கான (Healthy Ageing) பிசியோதெரபியும் உடற்செயல்பாடும் (Physical Activity). உடல் தளர்ச்சி (Frailty), கீழே விழுதல் (Falls) ஆகியவற்றைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது.
மக்களின் ஆயுள் கூடும்போது, தசை (Muscle) பலவீனம், உடல் சமநிலைக் (Balance) குறைவு, கீழே விழுதல் ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன. பிசியோதெரபியில் செய்யும் உடற்பயிற்சிகள் முதியவர்களுக்கு இப்படி உதவக்கூடும்:
- சுறுசுறுப்பாகவும் பிறரைச் சார்ந்திருக்காமலும் இருக்க
- சமநிலை, ஒருங்கிணைப்பு (Coordination), இயக்கத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த
- காயங்களைக் குறைத்து, அன்றாட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்ய
பிசியோதெரபியில் என்னென்ன அடங்கும்?
பிசியோதெரபி என்பது குறுகிய காலத்துக்கு வலியைக் குறைப்பது மட்டுமல்ல. நீண்டகால மீட்சியையும், பிரச்சினைகளைத் தடுப்பதையும் நோக்கிய ஒரு திட்டமிட்ட பாதை இது.
- பரிசோதனை (Assessment), இலக்கு நிர்ணயம்: உங்கள் அறிகுறிகள் (Symptoms), இயக்கத்திறன், உடல் தோரணை (Posture), முந்தைய உடல்நல வரலாறு (Medical History) ஆகியவற்றைப் பார்த்து, தெளிவான இலக்குகளுடன் சிகிச்சையைத் திட்டமிடுகிறோம்.
- உடற்பயிற்சி சார்ந்த மறுவாழ்வு: வலிமை, நெகிழ்வுத்தன்மை (Flexibility), சமநிலை, தாங்குதிறன் (Endurance) பயிற்சிகள், தசைகளின் கட்டுப்பாட்டையும் செயல்பாட்டையும் மீண்டும் பெற உதவுகின்றன.
- கைமுறை சிகிச்சை (Manual Therapy): மூட்டு அசைவு சிகிச்சை (Joint Mobilisation), தசை நீட்சி (Stretching), மென் திசு மசாஜ் (Soft Tissue Massage) ஆகியவை இறுக்கத்தைக் (Stiffness) குறைத்து, அசைவை மேம்படுத்த உதவக்கூடும்.
- வலி கட்டுப்பாடு (Pain Management): சூடு, குளிர் ஒத்தடம் (Heat and Cold Therapy), அல்ட்ராசவுண்ட் சிகிச்சை (Ultrasound), மின் தூண்டல் சிகிச்சை (Electrical Stimulation, TENS), டேப்பிங் (Taping), சப்போர்ட் பிரேஸ் (Bracing).
- வாழ்க்கை முறை வழிகாட்டல்: உடல் தோரணை, அசைவுப் பழக்கங்கள், உடலுக்கு ஏற்ற வேலை அமைப்பு (Ergonomics), காயம் வராமல் தடுப்பது பற்றிய ஆலோசனைகள்.
- தொடர் கண்காணிப்பு: உங்கள் முன்னேற்றத்தைக் கவனித்து வருகிறோம். உங்கள் உடல்நிலை முன்னேறும்போதோ, புதிய சவால்கள் வரும்போதோ திட்டத்தை மாற்றி அமைக்கிறோம்.
மீண்டு வர பிசியோதெரபி எப்படி உதவுகிறது
உடல் நலம் தேறுவதில் பிசியோதெரபி ஒரு முக்கியமான துணை. வலிமை, தன்னம்பிக்கை, தானே செயல்படும் திறன் ஆகியவற்றைப் படிப்படியாக மீண்டும் பெற இது வழிகாட்டுகிறது. பலன் ஆளுக்கு ஆள் மாறுபடும். கிடைக்கக்கூடிய பலன்களில் சில:
- காயங்கள், எலும்பு முறிவுகள் (Fractures) அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயக்கத்திறனை மீட்டெடுத்தல்
- வலியையும் அழற்சியையும் (Inflammation) தணித்தல்
- திசுக்களுக்கு (Tissues) ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்தும் கிடைக்க ரத்த ஓட்டத்தை (Circulation) மேம்படுத்துதல்
- தசைகள் மற்றும் தசைநாண்களில் (Tendons) திசு சீரமைப்புக்குத் துணை நிற்றல்
- நீண்ட மீட்சிக் காலத்தில் தசைகள் பலவீனமாவதைத் தடுத்தல்
- சிறந்த சமநிலையும் ஒருங்கிணைப்பும்; பக்கவாதம் (Stroke) அல்லது நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்குப் (Neurological Conditions) பிறகு இது முக்கியம்
- அன்றாட வேலைகளைத் தானே செய்யும் திறனை மீண்டும் பெறுதல்
- கட்டுப்பாடும் ஒருங்கிணைப்பும் பெற நரம்பு மண்டலத்துக்கு (Nervous System) மீண்டும் பயிற்சி அளித்தல்
- உடலின் இயற்கையான சீரமைப்புச் செயல்முறைகளுக்குத் துணை நிற்றல்
- திசுக்களை நெகிழ்வாக வைத்து, தழும்புத் திசுவால் (Scar Tissue) வரும் பிரச்சினைகளைக் குறைத்தல்
பிசியோதெரபிஸ்ட்களின் பங்கைப் போற்றுவோம்
பிசியோதெரபிஸ்ட்கள் பெரும்பாலும் வெளியே தெரியாமல் அமைதியாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் தாக்கம் பெரியது. Mobiphysio-வில், Dr. T.R. Vandana, PT மற்றும் எங்கள் பிசியோதெரபிஸ்ட் குழுவினர், எங்கள் RS Puram மற்றும் Goldwins கிளைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பிசியோதெரபிஸ்ட்கள்:
- நோய், காயம் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு மக்கள் வலிமையையும் இயக்கத்திறனையும் மீண்டும் பெற உதவுகிறார்கள்
- மீட்சிக் காலத்தில் வரக்கூடிய சிக்கல்களைத் (Complications) தடுக்க உதவுகிறார்கள்
- மூட்டு அழற்சி (Arthritis), முதுகுவலி (Back Pain) அல்லது நரம்பு சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களுக்குத் துணை நிற்கிறார்கள்
- ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு சிகிச்சையை அமைக்கிறார்கள்
- வளர்ச்சித் தாமதம் (Developmental Delay) உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருடனும் பணியாற்றுகிறார்கள்
- நோயாளிகள் தங்கள் மீட்சியைத் தாங்களே அதிகம் கையாள உதவுகிறார்கள்
இந்த உலக பிசியோதெரபி தினத்தில் நீங்கள் பங்களிக்கும் வழிகள்
இந்த நாள் பாராட்டுக்கு மட்டுமல்ல, விழிப்புணர்வுக்கும் உரியது. நீங்கள் இவற்றின் மூலம் பங்கேற்கலாம்:
- ஒரு மெசேஜ் அல்லது போஸ்ட் மூலம் ஒரு பிசியோதெரபிஸ்ட்டுக்கு நன்றி சொல்லுதல்
- மற்றவர்களுக்கு ஊக்கம் தர, நீங்கள் மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்தல்
- உங்கள் சுற்றத்தில் உள்ளவர்களுக்குப் பிசியோதெரபி பற்றி எடுத்துச் சொல்லுதல்
- வலிக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற ஊக்குவித்தல்
- அருகில் நடக்கும் பயிற்சிப் பட்டறைகள் அல்லது சுகாதார முகாம்களில் கலந்துகொள்ளுதல்
- பள்ளிகளிலும் பணியிடங்களிலும் சரியான உடல் தோரணையையும் நல்ல அசைவுப் பழக்கங்களையும் ஊக்குவித்தல்
- பிசியோதெரபி அமைப்புகளை ஆன்லைனில் பின்தொடர்ந்து ஆதரித்தல்
முன்பதிவு செய்யுங்கள்
Mobiphysio பிசியோதெரபிஸ்ட்கள் · RS Puram மற்றும் Goldwins
உங்கள் பிசியோதெரபி பரிசோதனையை இன்றே முன்பதிவு செய்ய, Mobiphysio-வுக்கு WhatsApp-இல் மெசேஜ் செய்யுங்கள் அல்லது போன் செய்யுங்கள்.
