தோள்பட்டை எப்படி வேலை செய்கிறது
உங்கள் தோள்பட்டை ஒரே ஒரு மூட்டு (Joint) அல்ல. பல மூட்டுகளும் மென்திசுக்களும் (Soft tissues) சேர்ந்து வேலை செய்யும் ஒரு அமைப்பு அது.
தோள்பட்டை வலி பலருக்கும் வரக்கூடிய ஒன்று.
- தோள் மூட்டு (Glenohumeral / GH Joint)
- காறை எலும்பு–தோள் முனை மூட்டு (Acromioclavicular / AC Joint)
- தோள்பட்டை எலும்பு–மார்புக்கூடு இணைப்பு (Scapulothoracic Joint)
- சுற்றியுள்ள தசைகள், தசைநாண்கள் (Tendons), இணைப்பு நார்கள் (Ligaments), சிறு திரவப் பைகள் (Bursae)

தோள்பட்டை வலிக்கான முக்கியக் காரணங்கள்
தோள்பட்டை வலிக்கான காரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளில் அடங்கும்.
- அடிபட்டதால் வருபவை (Traumatic): எலும்பு முறிவு (Fracture), மூட்டு விலகல் (Dislocation), மென்திசுக் காயங்கள், ஊமைக்காயம் (Contusion), சுளுக்கு (Sprain)
- அடிபடாமல் வருபவை (Atraumatic): தேய்மான மாற்றங்கள் (Degenerative changes), அழற்சி (Inflammation), அளவுக்கு மீறிய பயன்பாடு (Overuse)
தோள்பட்டைக் காயங்களைத் தடுக்க நாங்கள் எப்படி உதவுகிறோம்
எல்லாத் தோள்பட்டைப் பிரச்சினைகளுக்கும் பொருந்தும் ஒரே சிகிச்சையோ, ஒரே நடைமுறையோ (Protocol) இல்லை. உங்கள் தேவைகளுக்கும் இலக்குகளுக்கும் ஏற்ப சிகிச்சை அமைய வேண்டும்.
கைகளால் செய்யும் சிகிச்சை (Manual therapy), மின் சிகிச்சை (Electrotherapy) ஆகியவற்றை உடற்பயிற்சிச் சிகிச்சையுடன் (Exercise therapy) சேர்த்துச் செய்வது பலருக்கு உதவக்கூடும்.
- பளுவைச் சரியாகக் கையாளுதல் (Load management), தசை வலிமை
- உங்கள் தோள்பட்டை தாங்கும் அளவைத் தாண்டி அதிகப் பளு கொடுக்காமல் இருப்பது
- ஓய்வும், உடல் மீண்டு வருவதும் (Recovery)
- வலி மீண்டும் வரும் வாய்ப்பைக் குறைக்க உதவும் முறையான மறுவாழ்வுப் பயிற்சி (Rehab)
- அசைவு முறையை மேம்படுத்துதல் (Technique), வழக்கமான உடல் இயக்கம், ஆரோக்கியமாக இருத்தல்
- சர்க்கரை நோய் (Diabetes), மூட்டு வாதம் (Arthritis) போன்றவை இருந்தால், அவற்றையும் கருத்தில் கொண்டு பயிற்சித் திட்டம் அமைத்தல்
முதலில் பரிசோதனை
பயிற்சிகளைத் தொடங்கும் முன், உங்கள் தோள்பட்டை எப்படி வேலை செய்கிறது என்பதை நாங்கள் பரிசோதிக்கிறோம்.
- அசைவின் அளவு (Range of Motion – ROM)
- தசை வலிமை (Muscle Strength)
- தோள்பட்டையின் அசைவுத்திறன் (Mobility)
- உடல் தோரணை (Posture)
- மூட்டின் உறுதித்தன்மை (Joint Stability)
தோள்பட்டைப் பயிற்சிகள்: அசைவுத்திறன், பிறகு உறுதித்தன்மை, பிறகு வலிமை
முதலில் அசைவுத்திறன், பிறகு உறுதித்தன்மை, அதன் பிறகு வலிமை என்ற வரிசையில் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். தோள்பட்டையின் அசைவு, முதுகுப்புறம் உள்ள தோள்பட்டை எலும்பு (Shoulder blade / Scapula), மேல் முதுகு (Thoracic region) ஆகியவற்றையும் சார்ந்திருக்கிறது. அதனால் அவற்றுக்கும் சேர்த்துப் பயிற்சி தருகிறோம். அதோடு, அன்றாட வேலைகளுக்குத் தேவையான அசைவுகளுக்கும் (Functional daily activities) பயிற்சி அளிக்கிறோம்.
படி 1, அசைவுத்திறன்: மேல் முதுகைத் திருப்புதல் (Thoracic rotation), மேல் முதுகை முன்னும் பின்னும் வளைத்தல் (Thoracic flexion and extension), தோள்பட்டை எலும்பு அசைவுகள் (Scapular movements), கையை முன்னோக்கி உயர்த்துதல், பின்னோக்கி நகர்த்துதல் (Shoulder flexion and extension), கையை உள்ளும் வெளியும் சுழற்றுதல் (Internal and external rotation).
படி 2, உறுதித்தன்மை: குப்புறப் படுத்தபடி முதுகை நிமிர்த்தும் பயிற்சி (Spine extension in prone lying – T, Y, A), நின்றபடி மேல்நோக்கி இழுத்தல் (Upright row), எலாஸ்டிக் பேண்டை இருபுறமும் இழுத்தல் (Band pull apart), அசையாமல் தசையை இறுக்கிப் பிடிக்கும் பயிற்சிகள் (Isometric exercises).
படி 3, வலிமை: கையைப் பக்கவாட்டில் உயர்த்துதல் (Shoulder lateral raise), கையை முன்னால் உயர்த்துதல் (Front raise), முகத்தை நோக்கி இழுத்தல் (Face pull), தண்டால் (Push up), படுத்தபடி எடையைத் தள்ளுதல் (Bench press).
சரியான பயிற்சிகளும், அவற்றை எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். அதனால், தயவுசெய்து இவற்றை வழிகாட்டுதலுடன் செய்யுங்கள். வலி அதிகமானால், நிறுத்திவிட்டு ஆலோசனை பெறுங்கள்.
முன்பதிவு செய்யுங்கள்
Mobiphysio பிசியோதெரபிஸ்ட்கள் · RS Puram மற்றும் Goldwins
உங்கள் தோள்பட்டைப் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய, RS Puram அல்லது Goldwins கிளையில் உள்ள Mobiphysio-வுக்கு WhatsApp செய்யுங்கள் அல்லது அழையுங்கள்.
