வயிற்றுத் தசைப் பிரிவு (Diastasis Recti Abdominis) என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் வயிற்றின் இடது, வலது தசைகள் பலவீனமாகி, பக்கவாட்டில் விரிந்து நீளும்போது வயிற்றுத் தசைப் பிரிவு ஏற்படுகிறது.
இது மிகவும் சகஜமாகக் காணப்படும் ஒன்று. ஆனாலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகத் தாயானவர்கள் பலருக்கு இது என்னவென்றோ, தங்களுக்கு இது இருக்கிறதா என்றோ தெரிவதில்லை.

கோயம்புத்தூரிலிருந்து ஒரு சிகிச்சை உதாரணம்
எங்கள் நோயாளிகளில் ஒருவருக்கு, இரண்டாவது மகன் பிறந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் வயிற்றுத் தசைப் பிரிவு இருப்பது தெரிய வந்தது. ஏதோ சரியில்லை என்று அவருக்குத் தெரிந்தது. ஆனால், அது கர்ப்பத்தின் ஒரு பகுதி என்றும், காலப்போக்கில் போய்விடும் என்றும் நினைத்தார்.
ஒரு மகப்பேறு மருத்துவர் (gynaecologist) இந்தப் பிரச்சினையைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இரண்டாவது பிரசவம் முடிந்து சுமார் 12 ஆண்டுகள் கழித்து, அவர் Mobiphysio-க்கு வந்தார்.
தனக்கு மிகவும் கடினமாக இருந்தது தன் உடல் தோற்றம் (body image) பற்றிய எண்ணம்தான் என்று அவர் சொல்கிறார். நேராக நின்றாலும், அவர் இன்னும் கர்ப்பமாக இருப்பது போலவே தெரிந்தார். அடுத்த குழந்தை எப்போது பிறக்கப்போகிறது என்று சிலர் அவ்வப்போது கேட்டதும் உண்டு.
இரண்டு ஆண்டுப் பிசியோதெரபியில் என்ன மாறியது
2022-ல் அவர் எங்களிடம் வந்தபோது, வயிற்றுச் சுவர் பிரிவால் (abdominal wall separation) அவருடைய தொப்புள் (umbilicus) இடம் மாறியிருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில், இந்த நிலை மேம்பட எங்களால் உதவ முடிந்தது.
ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள்; பலன்களும் ஆளுக்கு ஆள் மாறுபடும். அவரைப் பொறுத்தவரை, உறுதியான, தொடர்ச்சியான முயற்சியால் இந்த மாற்றங்களைக் கண்டோம்:
- வயிற்றுத் தசைகளுக்கு இடையிலான பிரிவு கணிசமாகக் குறைந்தது
- தசைகளின் உறுதி (muscle tone) குறிப்பிடத்தக்க அளவில் கூடியது
- அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தோல் இப்போது தளர்ந்து தொங்குவதில்லை
- அவர் முன்பை விட வலிமையாக இருக்கிறார்; இன்னும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற அவரால் முடிகிறது
- அவருக்கு இன்னும் முன்னேற வேண்டியது நிறைய இருக்கிறது; அதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்
வயிற்றுத் தசைப் பிரிவுக்கு எங்கள் சிகிச்சை முறை
ஒவ்வொருவருக்கும் ஏற்பச் சிகிச்சை திட்டமிடப்படுகிறது. இவருக்குப் பயன்படுத்தப்பட்ட சில முறைகள்:
- Dynamic Neuromuscular Stabilisation (DNS) பயிற்சிகள்
- மூச்சு விடும் முறையைச் சரிசெய்தல் (breathing pattern correction)
- மையத் தசைகள் (core muscles), இடுப்புத் தளத் தசைகள் (pelvic floor muscles) இரண்டும் இணைந்து சீராகச் செயல்பட உதவும் பயிற்சிகள்
- நிலைத்தன்மைப் பயிற்சிகள் (stability exercises)
Mobiphysio-க்கு வாருங்கள்
Dr. T.R. Vandana, PT, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தன் குழுவுடன் சேர்ந்து 3000+ நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளார். RS Puram (No.28, Captain Palaniswamy Layout, மாநகராட்சிப் பூங்கா எதிரில்) அல்லது Goldwins (11/23, Avinashi Road) கிளையில் எங்களைச் சந்திக்கலாம்.
இப்போது கேட்டாலும் தாமதமில்லை. பிரசவத்திற்குப் பிறகும் உங்கள் வயிறு வித்தியாசமாகத் தெரிந்தாலோ, வயிற்றில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாலோ, உங்களுடன் சேர்ந்து நாங்கள் அதை மதிப்பீடு (assessment) செய்யலாம். கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பிறகும் பிசியோதெரபி தொடங்க, உங்கள் மருத்துவரின் ஒப்புதல் தேவை.
முன்பதிவு செய்யுங்கள்
Mobiphysio பிசியோதெரபிஸ்ட்கள் · RS Puram மற்றும் Goldwins
உங்கள் வயிற்றுத் தசைப் பிரிவு மதிப்பீட்டுக்கு முன்பதிவு செய்ய, Mobiphysio-வை WhatsApp-ல் தொடர்புகொள்ளுங்கள் அல்லது அழையுங்கள்.
